நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி, ஆறு பேர் காயம்!
 Thursday, July 20th, 2023
        
                    Thursday, July 20th, 2023
            
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் ஆக்லாந்தில் உள்ள முக்கியமான தொடருந்து நிலையம் அருகே கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கின்ற இடத்தில் நியூசிலாந்து நேரப்படி இன்று காலை 7.30 இற்கு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை காவல்துறையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இந்நிலையில் பெண்களுக்கான உலகக்கிண்ண கால்பந்து போட்டி நியூசிலாந்தில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ், உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டபடி இன்று ஆரம்பமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ”நாங்கள் பிஃபா உடன் தொடர்பில் இருந்து வருகிறோம், அதனால் அவர்கள் திட்டங்களை வழங்கி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் தேசிய அளவிலான பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        