நாளை முதல் மக்கள் பாவனைக்கு வருகின்றது காங்கேசன்துறை புகையிரத நிலையம்!
Friday, June 24th, 2016
இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் கடந்த 26 வருடகாலமாக இருந்த வலி.வடக்கின் காங்கேசன்துறை புகையிரத நிலையம் உள்ளிட்ட 201.8 ஏக்கர் பரப்பளவிலான நிலம், பொதுமக்களிடம் நாளை சனிக்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியால் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுன்றது.
இந்நிகழ்வில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி.சில்வா, யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் வாழ்ந்து தற்போது இடம்பெயர்ந்து உள்ள மக்கள் நாளைய தினம் காலை 9 மணிக்கு முன்னர் காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
வலிகாமத்தில் புகையிலை அறுவடை மும்முரம்
ஆசிரியர் வெற்றிடங்களுக்காக தனியார் பல்கலைக்கழகங்களில் இருந்தும் இணைத்துக் கொள்ளப்படும்!
இன்று மழை பெய்யும் – வானிலை அவதான நிலையம்!
|
|
|


