நாய்களின் தொல்லையை கட்டப்படுத்துமாறு கோரிக்கை!

Saturday, June 23rd, 2018

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்பாக நாய்களின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது.

மேற்படி வைத்தியசாலைக்கு முன்பாக நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள் நாய்க்கடிக்கு உள்ளாக வேண்டிய நிலையும் காணப்படுகின்றது. இப்பகுதியில் பெரும்பாலான விபத்துக்கள் கூட நாய்களால் ஏற்படுவதாகவும் குறிப்பாக பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களே விபத்துக்குள்ளாவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்நாய்களைக் கட்டுப்படுத்துவதற்கு கரைச்சி பிரதேச சபையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: