நான் தலைவராக இருந்திருந்தால் விளக்கம் கேட்டிருப்பேன் -சந்திரிகா !
Thursday, June 9th, 2016
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை கட்சியின் இரண்டாவது பதவிக்கு கொண்டு வருவது குறித்து அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு அல்ல என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தான் கட்சியின் தலைவராக இருந்திருந்தால் அமைச்சர் ஜோன் செனவிரத்னவிடம் விளக்கம் கோரி நடவடிக்கை எடுத்திருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விற்கு பதிலளித்த சந்திரிகா மேலும் குறிப்பிடுகையில்,
சுதந்திரக் கட்சியில் அவ்வாறான பத வியை வழங்க எவ்விதமான தீர்மானமோ பேச்சுவார்த்தைகளோ இடம் பெறவில்லை என ஜனாதிபதி என்னிடம் குறிப்பிட்டார். ஆனால் நான் கட்சியின் தலைவராக இருந் திருந்தால் அமைச்சர் ஜோன் செனவிரத்ன விடம் விளக்கம் கோரி நடவடிக்கை எடுத்தி ருப்பேன் என்றார்
Related posts:
இலங்கைக்கு எச்சரிக்கை!
கொல்பிட்டி பொலிஸ் குற்றப் பிரிவின் அதிகாரி திடீர் மரணம்!
எரிபொருள் கிடைப்பதற்கு ஒத்துழைக்காவிடில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படு...
|
|
|


