நான் தலைவராக இருந்திருந்தால் விளக்கம் கேட்டிருப்பேன் -சந்திரிகா !

Thursday, June 9th, 2016
முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை கட்­சியின் இரண்­டா­வது பத­விக்கு கொண்டு வருவது குறித்து அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன தெரி­வித்­துள்­ளமை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் நிலைப்­பாடு அல்ல என தெரி­வித்­துள்ள முன்னாள் ஜனா­தி­ப­தி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க, தான் கட்­சியின் தலைவ­ராக இருந்­தி­ருந்தால் அமைச்சர் ஜோன் சென­வி­ரத்­ன­விடம் விளக்கம் கோரி நட­வ­டிக்கை எடுத்திருப்பேன் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அலு­வ­ல­கத்தில் நேற்று புதன்கிழமை இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­ண­துங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விற்கு பதி­ல­ளித்த சந்­தி­ரிகா மேலும் குறிப்­பி­டு­கையில்,
சுதந்­திரக் கட்­சியில் அவ்­வா­றான பத ­வியை வழங்க எவ்­வி­த­மான தீர்­மானமோ பேச்சுவார்த்­தை­களோ இடம் பெறவில்லை என ஜனா­தி­பதி என்­னிடம் குறிப்­பிட்டார். ஆனால் நான் கட்சியின் தலைவராக இருந் திருந்தால் அமைச்சர் ஜோன் செனவிரத்ன விடம் விளக்கம் கோரி நடவடிக்கை எடுத்தி ருப்பேன் என்றார்

Related posts: