நான்கு மணி நேரத்தில் 50 இலட்சம் ரூபா தானம் !

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பெருந்தொகை பணத்தை மக்களுக்கு தானமாக பகிர்ந்தளித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இரத்தினபுரி, மலங்கம பிரதேசத்திலுள்ள வர்த்தகர் ஒருவர் பெருந்தொகை பணத்தை தன்சலாக வழங்கியுள்ளார்.
தன்னிடம் வரும் ஏழை மக்கள் மற்றும் வீட்டின் அருகில் வசிக்கும் மக்களுக்கு பண உதவி வழங்கும் தன்சல் ஒன்று அந்தப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
மலங்கம பிரதேசத்தை சேர்ந்த இரத்தினக் கல் வியாபாரி ஒருவர் அவரது வீட்டில் வைத்து இந்த பண உதவியை செய்துள்ளார்.
இதன்போது பாரியளவு மக்கள் கூட்டம் ஒன்று அங்கு வந்துள்ள நிலையில் அவர்களுக்கு 5000, 3000,1500, 1000 என கணக்கில் பணம் வழங்கப்பட்டுள்ளது.
நான்கு மணி நேரத்தில் சுமார் 50 இலட்சம் ரூபா தானமாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மத்திய மாகாணத்தின் புதிய ஆளுனரானார் நிலூக்கா!
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவம் - இராணுவத் தளபதி அறிவிப்ப...
முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தூரப்பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் அருகிலுள்ள ப...
|
|