நாட்டில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படலாம்! – நீர் வழங்கல் வடிகானமைப்புச் சபை!
Monday, October 10th, 2016
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வாய்ப்புள்ளதாக, நீர் வழங்கள் மற்றும் வடிகானமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
தற்போது அதிகளவான நீர் பயன்பாடு நிலவுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நிலவும் வரட்சியாக காலநிலையால் நீர் நிலைகளிலும் நீரின் மட்டம் குறைவடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கள் மற்றும் வடிகானமைப்புச் சபை மக்களிடம் கோரியுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும், நீர் வழங்களை மட்டுப்படுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Related posts:
வைபர் ஸ்ரீலங்காவுடன் இணைந்து வடிவமையுங்கள்!
கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல் பணம் - வீடொன்றின் மீது தாக்குதல் - வீட்டின் உர...
இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் உகந்த இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்திற்கு...
|
|
|


