நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் 4 இலட்சம் கடனாளி!

நாட்டிலுள்ள சகல பிரஜைகளும் தலா 4 லட்சம் ரூபா கடனாளிகளாக உள்ளனர் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராம சிறிஜயகம வீடமைப்புத் திட்டத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதை நான் எதிர்க்கவில்லை எனவும் அந்த துறைமுகத்திற்கு கப்பல்கள் வராததே பிரச்சினையானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குடியிருப்பதற்கு வீடுகள் இல்லாததே ஹம்பாந்தோட்டை மக்களின் பிரச்சினையாகும். எனினும் கடந்த அரசாங்கம் இந்த பிரச்சினையை தீர்க்கவில்லை.
எனினும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பின்னர், மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க விருப்பம் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
மகன் பாடசாலைக்கு செல்லாததால் தாய்க்கு விளக்கமறியல்!
கொரோனாவின் உச்சக்கட்ட ஆபத்தில் யாழ்ப்பாணம் - வடக்கில் 44 பேருக்கு தொற்றுறுதி!
60 மருந்துப் பொருட்களின் சில்லறை விலையை குறைக்க அமைச்சரவை அனுமதி - சுகாதார அமைச்சர் கேஹலிய ரம்புக்வெ...
|
|