நாட்டின் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

Wednesday, October 26th, 2016

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சூறாவளியாக (KYANT) மாறியுள்ளது. இது இலங்கையின் வடகிழக்கே 1300 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால் இலங்கைக்கு எவ்வித நேரடி பாதிப்புகளும் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல்மாகாணம் சப்ரகமுவ வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளைகளில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை மற்றும் அதிக காற்று வீசக்கூடும் என்பதால் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது

43e636e72e26f15d56a1a02e0158cece_L

Related posts: