நாடு முழுவதும் பழ உற்பத்திக் கிராமங்கள் அமைக்க முடிவு!
Friday, November 18th, 2016
நாடு முழுவதும் பழ உற்பத்திக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளதாக விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் வசந்த அளுத்விகார தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இந்த வேலைத் திட்டம் அடுத்த வருடம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார். தேசிய உணவு உற்பத்தி வேலைத் திட்டத்திற்கு அமைய ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், ஒவ்வாரு பழ உற்பத்திக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன. சேதப் பசளை பயன்பாடு மீது விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். மேலும் சேதப் பசளை பயன்பாடு தொடர்பாக கமநலசேவை மத்திய நிலையங்களில் தனியான அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts:
தேசிய வளங்களை விற்பது அரசின் நோக்கமல்ல - நல்லுறவை பலப்படுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் ...
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படலாம் - அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
பொருளாதார நெருக்கடியினால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடாவிடமி...
|
|
|


