நல்லூர் மஹோற்சவத்தில் தவறவிடப்பட்ட பொருட்கள் உரிமை கோரப்படாத நிலையில்.!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் போது பக்தர்களால் தவறவிடப்பட்ட தங்கச் சங்கிலி,மோதிரம், தேசிய அடையாள அட்டை, திறப்புக்கள் மற்றும் சில கைப்பைகள் என்பன கண்டெடுக்கப்பட்டு யாழ். மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குறித்த பொருட்கள் இன்று வரை உரிமை கோரப்படாத நிலையிலுள்ளன.எனவே, உரிமையாளர்கள் உரிய அடையாளத்தை உறுதிப் படுத்திப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் கேட்டுள்ளார்.
Related posts:
ஜூன்- ஜூலையில் டெங்கு நோய் பரவும் அபாயம்!
முப்படையினர் பொலிசாருடன் வடக்கின் புதிய ஆளுநர் சந்திப்பு - பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆர...
எரிவாயு விநியோகம் தொடர்பில் எந்த அச்சமும் தேவையில்லை - இன்றுமுதல் வழமையான விநியோகம் இடம்பெறுவதாக லிற...
|
|