நல்லிணக்க பணிகளுக்கு அமெரிக்கா உதவும்! நீஷா பிஸ்வால்!

Wednesday, June 15th, 2016

இலங்கையில் மனித உரிமைகள் மதிப்பதுடன் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்தும் உறுதியாக உள்ளதாக தெற்காசிய பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நீஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

கொலம்பிய பலக்லைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது உரையாற்றிய அவர், இலங்கை மனித உரிமை விடயத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. எனினும் இன்னும் செய்யவேண்டியவையும் உள்ளன என்று குறிப்பிட்டார்.

காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம் ஒன்று அமைக்கப்படுவது, ஐக்கிய நாடுகளின்நிபுணர்களை நாட்டுக்குள் அனுமதித்து தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வது போன்றநடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்கிறது இந்நிலையில் நிபுணர்கள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலிலும் இலங்கைக்கு உதவமுடியும் என்று பிஸ்வால் தெரிவித்தார்.

இலங்கையின் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் காணிகளை திருப்பியளித்தல் உள்ளிட்ட விடயங்களில் முன்னோக்கி செயற்படுவது சிறப்பானது.

எனினும் காணாமல் போனோரின் உறவினர்கள், இன்னும் தமது உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்றனர். இதற்கு இன்னும் நீதிகிடைக்கவில்லை. இதேவேளை, நல்லிணக்க முன்னேற்றங்களை ஆரம்பிப்பது என்பது கடினமான பணியாகும். அதனை இலங்கையால், தனித்து செயற்படுத்தமுடியாது. இதற்காக உதவ எந்தவேளையிலும் அமெரிக்கா தயாராக இருக்கிறது என்று நீஷா பிஸ்வால் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: