நஞ்சற்ற சேதன உணவு உற்பத்தித் திட்டத்தில் 23 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 530 பயனாளிகள் தெரிவு!

நஞ்சற்ற சேதன உணவு உற்பத்தித் திட்டத்தில் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 23 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 530 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நாற்றுக்கள், விதைகள், பழ மரக் கன்றுகள் விநியோகிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நஞ்சற்ற சேதன உணவு உற்பத்தித் திட்டத்தின் நிதி வீட்டுத் தோட்டச் செய்கையினை ஊக்குவிக்கும் வகையில் உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மகளிர் கமக்கார அமைப்பு உருவாக்கப்பட்டுச் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
Related posts:
சுவிஸ் நாட்டின் தூதுவருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு
வணிகத்திற்காக மூன்றாம் தரப்பினரையும் தொடர்பு கொள்ளவில்லை - சினோபெக் நிறுவனம் அறிக்கை!
பிரிக்ஸ் அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா பயணமாகின்றார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!
|
|