நச்சுப்புகைகளை வெளியேற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை – இலங்கை மோட்டார் திணைக்கள விசேட வேலைத்திட்டப் பணிப்பாளர் தெரிவிப்பு!

இலங்கை மோட்டார் திணைக்களத்தின் விசேட வேலைத் திட்ட பிரிவினால் வடக்கு மாகாணம் உட்பட நாடு தழுவிய ரீதியில் “பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுத்தனமையான புகைகளைக் கட்டுப்படுத்தி சூழலைப் பாதுகாத்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்” என்ற விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வாகனங்களை தீடீர் ஆய்வுக்குட்படுத்தி அதிகமான நச்சுப்புகைகளை வெளியேற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை மோட்டார் திணைக்களத்தின் விசேட வேலைத்திட்டப் பணிப்பாளர் ஏ.டபிள்யூ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெரிவிக்கையில்,
நாடு தழுவிய ரீதியில் புகைப் பரிசோதனை சான்று பெற்றதன் பின்னரும் அதிகளவான வாகனங்கள் நச்சுப் புகைகளைக் கக்கி சூழலை அசுத்தமடையச் செய்வதுடன் மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதையும் நாம் தீடீர் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்துள்ளோம். இவ்வாறு பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கப்படும் வாகனங்களுக்கு அதனை சீர் செய்யும்படி 14 நாட்கள் கால அவகாசம் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது.
குறித்த காலப் பகுதிக்குள் சீர் செய்து எமக்கு உறுதிப்படுத்தத் தவறும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. நச்சுப் புகைகளைக் கக்கி சூழலை அசுத்தமடையச் செய்யும் வாகனங்கள் தொடர்பில் பொதுமக்கள் 011 266 9915 எனும் தொவைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது 011 305 4356 என்ற தொலைநகல் ஊடாகவோ தகவல்களை வழங்கி உதவ முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|