நகை மோசடியிலீடுபட்ட பெண்கள் இருவருக்கு விளக்கமறியல்!

ஏழாலை பகுதியில் பெண் ஒருவரை ஏமாற்றி 80 பவுண் தங்க நகைகளை மோசடி செய்த இரு பெண்களையும் ஒக்டோபர் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன், இன்று (20) உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றில் பணிபுரியும் ஒருவரது வீட்டில் இரண்டு பெண்கள் வந்து தங்கியுள்ளனர். அந்த இரண்டு பெண்களும், நீதிமன்றில் பணிபுரிவரின் மனைவியிடம் நகைகளை கைமாற்றாக வாங்கியுள்ளனர்.
நகையைத் திருப்பிக்கேட்டபோது, அதனை அடகு வைத்துள்ளதாகவும், மேலும் பணம் தேவையாகவுள்ளது என பல தடவைகள் நகைகளை வீட்டுக்கார பெண்ணிடம் இருந்து இந்த இரண்டு பெண்களும் வாங்கியுள்ளனர். இவ்வாறு 80 பவுண் நகைகளை அவர்கள் ஏமாற்றி வாங்கியுள்ளனர்.
வீட்டில் இருந்த நகைகள் எங்கே என கணவன் கேட்ட போது, மனைவியான மேற்படி பெண் நடந்தவற்றை கூறியுள்ளார். இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், ஏமாற்று நாடகம் ஆடி நகையினை மோசடி செய்த பெண்களை கைது செய்திருந்தனர்.அவர்கள் இருவரும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். நகைகளை கொடுத்த பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|