தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!
Wednesday, December 7th, 2016
இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபையால் காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய தொழில் தகைமை கொண்ட தொழில்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், மின் இணைப்பாளர், தையல் பயிற்சி, மோட்டார் சைக்கிள் திருத்துநர், அறை பராமரிப்பாளர், உணவு மற்றும் மென்பானம் பரிமாறுவோர், தச்சுவேலை, காய்ச்சி இணைப்பாளர், கட்டிட உதவியாளர் ஆகிய தொழில்களுக்கான பயிற்சிகள் பயிற்றுவிக்கப்படவுள்ளன. தொழிற் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பங்களை தொழிற்பயிற்சி நிலையம், காரைநகர் என்ற முகவரிக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts:
2 கோடியே 10 லட்சம் பெறுமதியுடைய மாணிக்கம் கைப்பற்றல்!
அறுவடை இடம்பெறும் விவசாய நிலங்களுக்குச் சென்று நெல் கொள்வனவு செய்யும் தேசிய வேலைத்திட்டம் நாளைமுதல் ...
மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை - மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப...
|
|
|


