தொழிற்பயிற்சி நெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்!

Wednesday, November 2nd, 2016

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையானது இளைஞர்களின் தொழிற்கல்வியினை மேம்படுத்தும் நோக்குடனும் தற்கால வேலை வாய்ப்பினை மையமாகக் கொண்டும் முழுநேர மற்றும் பகுதிநேர தொழிற்பயிற்சி கற்கை நெறிகளை யாழ்.மாவட்டத்தில் நடத்தி வருகின்றது. பின்வரும் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதோடு இவற்றுக்கான பதிவுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இக் கற்கை நெறிகளாவன, விருந்தோம்பல் கற்கை நெறிகளுக்கான சமையலாளர், வெதுப்பாளர், அறை பராமரிப்பாளர், உணவு மற்றும் குடிபானம் பரிமாறுபவர், காய்ச்சி இணைப்பவர் (வெல்டிங்), இரு சக்கரம் மற்றும் ஆட்டோ திருத்துநர், அலுமினிய பொருத்துநர், வீட்டு மின்னிணைப்பாளர், மரவேலை தொழிநுட்பவியலாளர், பெண்கள், சிறுவர்களுக்கான ஆடை வடிவமைப்பாளர், கட்டட நிர்மாண உதவியாளர் ஆகும். இக்கற்கை நெறிகள் காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளன. இக்கற்கை நெறிகள் அனைத்தும் தேசிய தொழில் தகைமை (Nஏஞ) சான்றிதழுக்கான பயிற்சிகளாகும். இக்கற்கைநெறிகளை கற்க விரும்புபவர்கள் தங்கள் பதிவுகளை அலுவலக நேரத்தில் மாவட்ட அலுவலகம், முதலாம் மாடி, வீரசிங்கம் மண்டபம், இல.12 கே.கே.கே.எஸ் வீதி யாழ்ப்பாணம் எனும் இடத்தில் மேற்கொள்ளுமாறு இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை உதவிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

dgf

Related posts:


முடக்க கட்டுப்பாடுகள் அவசியம் என்றால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் இறப்புகளின் எண்ணிக்கை 48....
ஜனாதிபதியின் பதவிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்படாது – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்...
இராஜதந்திர உறவுகளையும் எமது வாழ்வாதாரத்!தையும் பாதிக்காத வகையில் - இந்திய கடற்றொழிலாளர் விகாரத்திற்க...