தொண்டர் ஆசிரியர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
Wednesday, October 5th, 2016
தொண்டா் ஆசிரியா்களாக நியமனம் பெற்று ரூபா 6 ஆயிரம் சம்பளத்தையே தாம் பெறுவதாக தெரிவித்து தமக்கு சம்பளத்தை அதிகரிக்குமாறும் கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர்.
தாங்கள் ரூபா 6 ஆயிரத்தையே பெறுவதாகவும் கடந்த வருடம் ஜூலை மாதம் தமக்கு ரூபா 10 ஆயிரம் தருவதாக சென்ன அரசாங்கம் இதுவரை வழங்க வில்லை எனத் தெரிவித்து இன்று (05) கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இருந்து ஜனாதிபதி அலுவலகம் வரை ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனா். அத்துடன் ஜனாதிபதி அலுவலக மேலதிக செயலாளரை சந்தித்து தமது மனுவை ஒப்படைத்தனா்.

Related posts:
முஸ்லீம் பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை!
தினமும் மேல் நீதிமன்றங்களில் விசாரணைகள்!
கடமைகளுக்குத் தேவையான ஊழியர்களை மட்டும் அழையுங்கள் - நிறுவனத் தலைவர்களிடம் இராணுவத்தளபதி வலியுறுத்து...
|
|
|


