தொடர் மழையால் குடாநாட்டில் 1,869 பேர் பாதிப்பு!

Wednesday, November 23rd, 2016

யாழ்.மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாகத் தொடரும் மழை காரணமாக 521 குடும்பங்களைச் சேர்ந்த 1,869பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 2 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், 292 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவமைய நிலையம் தெரிவித்துள்ளது.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 89 குடும்பங்களைச் சேர்ந்த 330பேரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 64 குடும்பங்களைச் சேர்ந்த 232பேரும் அத்துடன் 45 வீடுகளும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 223 குடும்பங்களைச் சேர்ந்த 772பேரும் அத்துடன் 218 வீடுகளும், யாழ்ப்பாணப் பிரதேச செயலர் பிரிவில் 66 குடும்பங்ளைச் சேர்ந்த 249பேரும் அத்துடன் 29 வீடுகளும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 63 குடும்பங்களைச் சேர்ந்த 238 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.

viber-image24

Related posts:

இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர் பஷில் - புதிய அரசியலமைப்பிற்கான மூல வரைபும் ஜனவரி மூன்றாம் வாரத்தில...
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை ...
இரண்டு ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்கள் - கைதிகளின் உழைப்புடன் 116 மில்லியன் வருமானம் - இராஜாங்க ...