தொடர் மழையால் குடாநாட்டில் 5,047 பேர் பாதிப்பு!
 Tuesday, May 17th, 2016
        
                    Tuesday, May 17th, 2016
            தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக யாழ். மாவட்டத்தில் 1,168 குடும்பங்களைச் சேர்ந்த 5,047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவிப் பணிப்பாளர் எஸ்.ரவி, நேற்று தெரிவித்தார்.
பாதிப்புகள் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில் –
‘யாழ். மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் பாதிக்கப்பட்ட இந்த மக்கள், இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 9 பிரதேச செயலாளர் பிரிவுகள் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பாதிப்பில் 2 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
அத்துடன், 105 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன. 6 மீனப் படகுகள் முற்றாக அழிவடைந்துள்ளதுடன் 3 படகுகள் சிறியளவில் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என அவர் தெரிவித்தார்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        