தேர்தல் சட்டவரையில் 57 குறைபாடுகள் உள்ளதால் உள்ளூராட்சித் தேர்தலைநடத்த முடியாது.

Thursday, October 6th, 2016

தற்போதுள்ள தேர்தல் சட்ட வரைபில் 57 குறையாடுகள் இருப்பதாகவும், அவற்றை நிவர்த்தி செய்யும்வரை உள்ளுராட்சி தேர்தலை நடத்த முடியாது எனவும் தேர்தல்கள் திணைக்களம் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட தேர்தல் சட்டத்தின்படி எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலை நடத்த முடியும். எனினும், அந்தத் திருத்திய சட்ட வரையில் காணப்படும் 57 தொழில்நுட்ப குறைபாடுகள் முதலில் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென தேர்தல்கள் திணைக்களம் அமைச்சுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

விருப்புவாக்கு தேர்தல் முறையை நீக்குவதை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சட்ட வரைவு தாயாரிக்கப்பட்டுள்ளது. எனினும், அதில் பிரதேசவாரியான தேர்தல் முறை பற்றிக் கூடுதல் கவனம் செலுத்தப்படவில்லை என்பதாலேயே இந்தத் தொழில்நுட்பக் குறைபாடுகள் உருவாகியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குறைபாடுகள் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கான அமைச்சுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் குறிப்பிட்ட சுருக்கம் பிரேரணையை மீளாய்வு செய்வது தொடர்பில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. எனினும், தேர்தல் ஆணையகத்துக்கு இருக்கும் அதிகாரங்களை பயன்படுத்தி இந்தக் குறைபாடுகளை வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் நிவர்த்தி செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தும் இதுவரை இந்த நடவடிக்கை பற்றித் திணைக்களம் தீர்மானிக்கவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

local

Related posts: