தேருநர் இடாப்புக்களின் 2ஆவது வரைவு ஞாயிறுவரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் !

தேருநர் இடாப்பு 2016 மீளாய்வுடன் தொடர்புடைய 2ஆவது வரைவு அனைத்து கிராம அலுவலர் அலுவலகங்கள் தோறும் மக்கள் பார்வைக்காகக் கடந்த 8ஆம் திகதி முதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதிவரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த வரைவினை பொது மக்கள் பார்வையிட்டு பெயர்களில், அடையாள அட்டை இலக்கங்களில் காணப்படுகின்ற தவறுகள், இடாப்பில் உட்சேர்ப்பதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் மற்றும் உரிமைக் கோரிக்கைள் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயர்கள் இதுவரையில் இடாப்பில் உட்சேர்க்கபடவில்லையாயின் அத்தகைய விடயங்கள் தொடர்பாக எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்பு தத்தம் கிராம அலுவலர் ஊடாக யாழ்.தேர்தல்கள் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பரீட்சைத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம்!
பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் நெல்லினை தேடி நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு!
சட்டம் மற்றும் அமைதி என்பன சகல மக்களுக்காகவே பாதுகாக்கப்படுகின்றது - பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறு...
|
|