தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவி சிவநாதன் சிவஸ்சியா!

இவ்வருட அகில இலங்கை தமிழ் தின போட்டியில் தனி இசைப்போட்டியில் மட்டக்களப்பு மாணவி முதலிடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய உயர்தரப் பாடசாலை மாணவி சிவநாதன் சிவஸ்சியா முதல் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். அகில இலங்கை ரீதியான தமிழ் தின போட்டியில் ஐந்தாம் பிரிவில் தனி இசைப்போட்டியில் சிவநாதன் சிவஸ்சியா இந்த முதல் இடத்தினைப்பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய உயர்தரப் பாடசாலையில் 13ம் தரத்தில் கலைப்பிரிவில் கற்றுவரும் இவர் பாடசாலையில் பல்வேறு பகுதிகளில் தனது திறமையினை வெளிப்படுத்தி வந்ததுடன் இசைத்துறையிலும் பல்வேறு பரிசுகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
Related posts:
அதிக வெப்பம் : யாழ்ப்பாணத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீருக்கு நிதி ஒதுக்கீடு!
வாக்களிப்பதற்கு விடுமுறை அளிப்பது அவசியம் - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
வெளிநாடுகளிலிருந்து மருத்துவ பொருட்களை இலவசமாக கொண்டுவந்து சேர்க்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்வருகை!
|
|