தேசிய தொற்றுநோய் போதனா வைத்தியசாலையாக மாற்றம்பெறும் IDH
Tuesday, October 10th, 2017
ஐ.டி.எச் தொற்றுநோய் வைத்தியசாலை தேசிய தொற்றுநோய் போதனா வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ளது.இதற்குத் தேவையான திட்டங்களை பெற்றுத் தருமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கொட்டிகாவத்த சனச சங்க மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார் கடந்த காலங்களில் கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். தேசிய தொற்றுநோய் பிரிவு நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் முறையான சிகிச்சை வழங்கப்பட்டதால், டெங்கு நோயை கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்ததென்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Related posts:
அமரர் சின்னத்துரை தவமணியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி!
அனைத்து விடுமுறைகளும் இரத்து!
ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை ...
|
|
|


