தேசிய உற்பத்தித் திறன் விருது வழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில்!

தேசிய உற்பத்தித் திறன் விருது வழங்கல் விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் விருது வழங்கும் விழா ரத்மலானை ஸ்டைன் மண்டபத்தில் இடம்பெற்றது. உற்பத்தித் திறன் எண்ணக்கருவை பின்பற்றி அதிக பயனைப் பெற்றுக்கொண்ட பாடசாலைகள் அரசதுறை உற்பத்திகள் மற்றும் சேவைகள் துறையினருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
1565 நிறுவனங்கள் இம்முறை போட்டிகளுக்கு விண்ணப்பித்திருந்தது. இதில் 998 நிறுவனங்கள் உரிய தகைமையைப் பெற்றிருந்தது. தங்க விருதுகளுக்கான தகைமையினை 5 நிறுவனங்கள் பெற்றிருந்தது.
முதலாம் இடத்திற்கான விருதுகளை 12 நிறுவனங்களும் இரண்டாம் இடத்திற்கான விருதுகளையும் 100 நிறுவனங்களும் மூன்றாவது இடத்திற்கான விருதுகளை 181 நிறுவனங்களும் பெற்றுக்கொண்டன.
இந்த நிகழ்வில் பாடசாலை துறை அரச துறை மற்றும் பிரதேச அலுவலகங்கள் பிரிவில் தங்க விருதுகளுக்கு தெரிவானவர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கிவைத்தார். உற்பத்தித் திறன் என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல் தொகுதியொன்றும் இந்நிகழ்வின்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அமைச்சின் செயலாளர் கே.பீ ரத்னசிறி தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் பணிப்பாளர் ஜே.எம் திலகா ஜயசுந்தர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|