தேங்காய் எண்ணெய் விலை குறைப்புக்கு அமைச்சரவை அனுமதி!
Wednesday, February 15th, 2017
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கான விஷேட பண்ட வரியை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஒரு கிலோ கிராம் தேங்காய் எண்ணெய்கான விலையை 150 ரூபாவில் இருந்து 130 ரூபாவாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொப்பரா மற்றும் பாம் எண்ணெய் ஆகியனவும் ஒரு கிலோகிராம் 130 ரூபாவில் இருந்து 110 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை 40,000 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சந்தையில் தேங்காய் எண்ணெய் விலையை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related posts:
சுகாதாரத்துக்கு ஒவ்வாத இறைச்சி விற்றவர்கள் மீது வழக்கு!
பாடசாலைகளை மூடுவதற்கு எவ்வித தீர்மானமும் இல்லை - கல்வி அமைச்சு!
அடையாளம் காணப்பட்ட முன்னணி சுகாதார ஊழியர்களின் உறவினர்களுக்கு தடுப்பூசி - அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ்...
|
|
|


