தொழிற்சங்கங்களுக்கு வழங்கும் சந்தா பணத்தினை நிறுத்தவுள்ளதாக தொழிலாளா்கள் எச்சரிக்கை!
Friday, October 14th, 2016
1000ரூபா சம்பளத்தை வலியுறுத்தியும், 18 மாதங்களுக்கான நிலுவை தொகையினை பெற்றுதருமாறு கோரியும், நோர்வூட் சென்ஜோன்டிலரி தோட்ட மக்கள் இன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆறுமுகன் தொண்டமான் அறிவித்தவாறு நாள் ஒன்றுக்கு 1000 ரூபா சம்பளத்தையும், வாரத்திற்கு ஆறு நாட்கள வேலை நாட்களாக வழங்கபட வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர். இதேவேளை தோட்ட தொழிலாளா்களால் தொழிற்சங்கங்களுக்கு வழங்கபடுகின்ற சந்தா பணத்தினை நிறுத்தபோவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமக்கள் தெரிவித்தனர்.
நியாயமான சம்பளம் வழங்குமாறு கேரிக்கை விடுத்து பல நாட்களாக தொடர் போராட்டங்களில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
கால்நடைகளுக்கான உணவுப்பொதி கொள்வனவின்போது கவனம் தேவை - பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபை வலியுறுத்து
தனி ஒரு பிரதேசத்தை முடக்குவதில் பயனில்லை - யாழ்.மாவட்ட முடக்க நிலை தொடர்பில் மாவட்டச் செயலகம் தகவல்!
கடந்த அரசாங்கத்தின் மருந்து கொள்வனவில் பாரிய நிதி முறைகேடு - CID யில் முறைப்பாடு !
|
|
|


