தென்மராட்சி இளையோர்களுக்கு தொழில் கல்வி நேர்முகத் தேர்வு!

Friday, April 14th, 2017

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகளுக்குத் தொழில் கல்வி மற்றும் தொழில் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கான  நேர்முகத் தேர்வு எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

குறித்த நேர்முகத் தேர்வு  மு.ப.9.00 மணி தொடக்கம் மாலை 43.00 மணி வரை  சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நடாத்தப்படவுள்ளன.

தென்மராட்சி பிரதேச செயலக மனிதவலு வேலை வாய்ப்புத் திணைக்களத்தினால் நடாத்தப்படவுள்ள இவ் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு தங்கள் தகைமைக்கேற்ப விரும்பிய துறையில் விரும்பிய தொழில் ஒன்றைத் தெரிவு செய்யலாமென பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி அலுவலர் அறிவித்துள்ளார்.  தேசிய அடையாள அட்டை கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சுயவிபரக் கோவையுடன் வருகை தருமாறும் அறிவித்துள்ளார்

Related posts:

நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ...
நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு கடன் உதவி வழங்குங்கள் - சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா கோரிக்கை!
விவசாய சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளிப்பு!