தூக்குத் தண்டனை கைதிகளுக்கு மறுவாழ்வு!
 Tuesday, August 14th, 2018
        
                    Tuesday, August 14th, 2018
            தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் வாடும் கைதிகளுக்கு மறுவாழ்வு அளித்து அவர்களும் சமுதாய் நீரோட்டத்தில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பினை வழங்க வேண்டுமென சிறைச்சாலை மறுவாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
தூக்குத் தண்டனையை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது என்ற தலைப்பில் சட்டக் கல்லூரியில் இடம்பெற்ற கூட்டத்தின்போதே அவர் கருத்துத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
தற்போது சிறையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் ஆயிரத்து 262 பேர் உள்ளனர். சிறையினுள் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் சிறைத்தண்டனை முடிந்து வெளியேறும் கைதிகள் மீண்டும் சமுதாயத்துடன் கலந்து சாதாரண வாழ்க்கையில் ஈடுபட வழிவகுக்கும் என்றார். போதைப்பொருள் விநியோம் வெகு சாதாரணமாக இடம்பெறுவதால் இவற்றை கண்டுபிடிப்பதற்கு நவீன உபகரணங்கள் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வழங்கப்படவேண்டுமெனவும் தெரிவித்தார்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        