துவிச்சக்கர வண்டி திருடியவருக்கு சிறை!
Friday, December 16th, 2016
துவிச்சக்கர வண்டி திருடியவருக்கு 10 வருடங்கள் ஒத்திவகை;கபபட்ட 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்த மல்லாகம் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சன் அபராதமாக 3ஆயிரம் விதித்துள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் வீடு ஒன்றில் 2015ஆம் ஆண்டு மாசி மாதம் 13ஆம் திகதி நுழைந்த மேற்படி நபர் 7,500 பெறுமதியாக பெண்கள் ஓடும் துவிச்சகர வண்டி ஒன்றை திருடியுள்ளார்.
இது தொடர்பில் துவிச்சக்கர வண்டி உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார் இதன் அடி;படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் திருடிய நபரை துவிச்சக்கர வண்டியுடன் கைது செய்தனர் நேற்று முன்தினம் இவருக்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பதிரம் மன்றில் வாசிக்கப்பட்டது. இதன்போது குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு வீட்டினுள் அத்தமீறி நுழைந்ததற்கு 1,500 அபராதமும், 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கரூழிய சிறைத்தண்டணையும், திருடிய பொருளை உடைமையில் வைத்திருந்தமைக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2வருட கரூழியச் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related posts:
|
|
|


