துறைமுகத்தில் தீ எற்பட்டது தவறான செய்தி!

Tuesday, August 30th, 2016

கொழும்பு துறைமுக வளாகத்திலுள்ள கிழக்கு முனையத்தில் நேற்று தீ ஏற்பட்டதாக ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தவறான செய்தியாகும் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் கொழும்பு துறைமுக வளாகத்தில் அமையப்பெற்றுள்ள  ஹயிஹீண்டாய் எனும்  தனியார் வேலைதளத்திலேயே இத்தீ விபத்து ஏற்பட்டது. அவ்வேலைதளத்தில் காணப்பட்ட பாவனைக்குதவாத இறப்பர் குழாய்களிலேயே தீ பற்றிக் கொண்டது. இவ் இறப்பர் குழாய்கள் கடலிலிருந்து கரைக்கு மண்ணை பாய்சுவதற்கு உபயோகிக்கப்பட்டன.

தீ ஏற்பட்ட இவ்வேலைதளமானது, கொழும்பு துறைமுகத்தின் கப்பல் செயற்பாட்டு எல்லைக்கு அப்பாலே அமையப்பெற்றுள்ளது. இத் தீ காரணமாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் நாளாந்த கொள்கலன்கள் செயற்பாட்டுக்கோ அல்லது கொழும்பு துறைமுகத்திலுள்ள முனையங்களில் முன்னெடுக்கப்படுகின்ற நாளாந்த செயற்பாடுகளுக்கோ எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

இதேவேளை, தீ காரணமாக கொழும்பு துறைமுகத்தின் சொத்துக்களுக்கோ அல்லது நபர்களுக்கோ எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. தீயை கட்டுப்படுத்தும் பொருட்டு, கொழும்பு துறைமுக வளாகத்திலுள்ள அனைத்து பகுதிகளும் உடனடியாக செயற்பட்டன. தீ ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு துறைமுக அதிகாரசபை விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts: