துபாயில் கொள்ளை இலங்கையர் மூவருக்கு சிறை!

ஒரு மில்லியன் திர்ஹாம் பெறுமதி மிக்க பொருள்களை விற்பனை செய்த இலங்கையர் ஒருவர் உட்பட 3பேருக்கு தலா ஒரு வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி அந்த மூவரும் உரிமையாளர் வெளிநாடு சென்றிருந்தபோது துபாய் விருந்தகம் ஒன்றில் இருந்த அவற்றை அபகரித்திருந்தனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவரான இலங்கையர் துபாயில் இருந்து தாய் நாட்டுக்குத் தப்பிச்செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கான சிறைத்தண்டனை முடிந்தவுடன் நாடு கடத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஏனைய இருவரும் பெறுமதிமிக்க பொருள்களுடன் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் முன்னிலையாகாத போதும் நீதிமன்றத்தால் இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி !
பெப்ரவரியில் காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!
செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் -தேர்தல்கள் ஆணைக்குழு த...
|
|