துணை மருத்துவ சேவையினரின் விடுமுறைகளால் அசௌகரியம் – சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோர் தெரிவிப்பு!

சாவகச்சேரி ஆதார வைத்தியாலையில் துணை மருத்துவ சேவையில் கடமையாற்றுபவர்கள் விடுமுறையில் செல்லும்போது மாற்று ஒழுங்கு இல்லாததால் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என நோயளர்கள் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலை ஆய்வு கூட உதவியாளர், எக்ஸ-;ரே பிரிவு போன்றவற்றுக்கு தென் பகுதியைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமது வசிப்பிடங்களுக்குச் சென்று திரும்பும் பாலப்பகுதி வரை பிரிவுகள் மூடப்படுகின்றன. நோயாளர்கள் தனியார் ஆய்வுகூடங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
அண்மையில் சங்கத்தானையில் இடம்பெற்ற வாகன விபத்தி;ல் காயமடைநதவர்கள் அனைவரும் தலை மற்றும் கை,கால்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்த போதும் எக்ஸ-;ரே பிரிவு அலுவலர் மூடப்பட்டிருந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நோய்த்தாக்கங்களின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஆய்வுகூட அலுவலர் விடுமுறையில் சென்றுள்ளனர். நோயாளர்கள் குருதிப்பரிசோதனைக்கான தனியார் ஆய்வு கூடத்தை நாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அலுவலர்கள் விடுமுறை கோரும் பட்சத்தில் அங்கு விடுமுறையை அனுமதிக்கும் அதிகாரி பதில் கடமைக்காக மந்திகை தெல்லிப்பழை ஆகிய வைத்தியசாலைகளில் கடமையாற்றுவோரை விடுவிக்குமாறு அறிவிக்கின்றபோதும் அவர்கள் வராததால் பிரிவுகளை மூடி வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது – என்று வைத்தியாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|