தீப்பற்றியது நீதவான் நீதிமன்றம்!
Monday, April 30th, 2018
பண்டாரவளை நீதவான் நீதிமன்ற ஆவண காப்பகத்தில் இன்று காலை 9.20 மணியளவில் ஏற்பட்ட தீயினால் காப்பகத்தில் இருந்த பெருமளவான ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.
குறித்த தீயினை பண்டாரவளை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும், காவல்துறையினரும் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது திட்டமிட்டமுறையில் மேற்கொள்ளப்பட்டதா? என்பது குறித்த விசாரணைகளை பண்டாரவளை காவல்துறையினர்மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
காணி வழக்கை தீர்க்கக் கோரி குடும்பப் பெண் உண்ணாவிரதம்!
இன்றும் அதிகரித்த வேகத்தில் காற்று வீசும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக்...
|
|
|


