திலக்கரட்ன தில்ஷானின் அடுத்த அவதாரம்!
Monday, September 5th, 2016
அண்மையில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் திலக்கரட்ன தில்ஷான் இசைத்துறையில் கால் பதித்துள்ளார்.
திலக்கரட்ன தில்ஷான் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா திலினி ஆகியோர் பாடியுள்ள பாடல் அடங்கிய காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. பாடல் கிரிக்கெட் ரசிகர்களை மாத்திரமல்ல, இசைப்பிரியர்களையும் கவர்ந்துள்ளது.
களுத்துறையில் பிறந்த திலக்கரட்ன தில்ஷான், பிறப்பில் இஸ்லாமியர். அவரது முதல் பெயர் துவான் மொஹமட் தில்ஷான்.
பின்னர் பௌத்த மதத்தை தழுவிக்கொண்ட அவர் தனது பெயரை திலக்கரட்ன முதியான்சலாகே தில்ஷான் என மாற்றிக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
இலங்கை அணி குறித்து சங்கா கருத்து!
கிழக்கிலிருந்து வடக்கு, தெற்கை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை!
நாட்டில் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக 10 மாவட்டங்கள் அடையாளம்; அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார தரப்ப...
|
|
|


