திருநெல்வேலி பகுதியில் வீடொன்றின் மீது இளைஞர் குழு தாக்குதல்!
Tuesday, October 4th, 2016
திருநெல்வேலி கிழக்கு பூதவராயர் சிவன் ஆலய வீதியிலுள்ள வீடொன்றின் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் நேற்றுத்இரவு (03) தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் குறித்த வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தும் நொருக்கப்பட்டுள்ளன. முகத்தைக் கறுப்புத் துணியால் மூடிக்கட்டியவாறு, 3 மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் குழுவொன்றே, இத்தாக்குதலை மேற்கொண்டு விட்டு, சிறிது நேரத்தில் அவ்விடத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, வீட்டிலிருந்தவர்கள் பின்பக்கக் கதவால் ஓடி அயல்வீட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்குச் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
இதுவரை 71 பேர் பலி!
'பேருந்தில் எதிர்காலத்திற்கு' - நூலகம் அற்ற பாடசாலைகளுக்கு நூலகங்களை வழங்கி வைத்தார் பிரதமர் மஹிந்த...
வினைத்திறனற்று இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பதிவாளர் திணைக்களம் - சேவை பெற செல்லும் மக்கள் பெரும் அவத...
|
|
|


