“திருநங்கைகளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே” – ஊடகவியலாளர் பிரதீபன் வீடு மீது தாக்குதல்!

Thursday, June 13th, 2024

யாழ் பிராந்தியத்தின் பிரபல ஊடகவியலாளரான பிரதீபனின் இல்லம் இனம்தெரியாதவர்களால் நள்ளிரவு தாக்கப்பட்டுள்ளது

திருநங்கைகளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே” எனக் கூறியே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது

யாழ் தீபன் என்றழைக்கப்படும் அச்சுவேலி பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் வீடு மீதே இனம் தெரியாத நபர்கள்  தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் நள்ளிரவு 12 .15/மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

பொல்லுகள், கோடாலிகள் சகிதம் வீட்டுக்குள் நுழைந்த இனம் தெரியாத நபர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

அத்துடன் ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிள் , அவரது சகோதரனின் முச்சக்கர வண்டி தீட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தாக்குதலாளிகள் வீதியில், திருநங்கைகளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே” என துண்டு பிரசுரம் வீசிவிட்டு செல்லப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நகர பகுதியில் மூன்றாம் பாலினத்தவர்களின் சுயமரியாதைக்கான நடைபயணம் இடம்பெற்று இருந்தது.

இதன்போது அந்த நிகழ்வினை பதிவு செய்வதற்கு அங்கு  youtube ப்பர் ஒருவர்  அங்கிருந்த திருநங்கைகளை தவறான முறையில் மிகவும் அருகில் சென்று அங்க உறுப்புகளை காணொளி பதிவு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

இதன் போது அங்கு நின்ற திருநங்கைகள் எங்களை இவ்வாறு நீங்கள் அருகில் வந்து காணொளியினை பதிவு செய்ய வேண்டாம் என்றும்,  ஏனைய செய்தியாளர்கள் போல் நாகரிகமாக நடந்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். அத்துடன் அந்த இடத்தில் முரண்பாடும் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அந்த youtube பார் எனது youtube-ல் உங்களை நான் கேவலப்படுத்தியே காணொளியை போடுவேன் என பகிரங்கமாக தெரிவித்து இருந்தார் என கூறப்படுகின்றது. அத்துடன் குறித்த திருநங்கைகள் நடனமாடும் பதிவொன்றை பதிவிட்டு தவறாக சித்தரிக்கப்பட்டும் இருந்ததை அவதானிக்க முடிந்தது.

ஆனால் இடம்பெற்றிருந்த சுயமரியாதை நடை பயணம், நிகழ்வுக்கு ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் கலந்து கொள்ளாத நிலையில் இவ்வாறான சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: