திருகோணமலையில் டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள்!

Tuesday, April 11th, 2017

திருகோணமலையில் டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. திருகோணமலை  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளார் பி. கயல்விழி இது குறித்து தெரிவிக்கையில் சுகாதார துறை மட்டுமல்லாது பல துறை சார்ந்த அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் பங்களிப்புடனேயே டெங்கு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளது என்றார்.

இந்த டெங்கு நோயை முற்று ஒழிக்க வேண்டுமானால் வீடுகளில் உள்ள சீமெந்து நீர் தொட்டிகள் முற்றாக அகற்றப்பட வேண்டும். அதற்குப் பதிலாக மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் தாங்கிகளை பயன்படுத்த வேண்டும் எனறும் சுட்டிக்காட்டினார்.

திருகோணமலை மாவட்டத்தில் 3438 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளானார்கள். இதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மாவட்டத்தில் உள்ள 12 சுகாதார சேவைகள் பணி மனை பிரிவுகளில் 5 பிரிவுகள் உயர் டெங்கு தாக்க பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிரு;தன.

கிராம மட்டத்தில் டெங்கு தடுப்பு குழுக்களை அமைத்த வருகின்றோம். பயன்படுத்தாமல் உள்ள மலசல கூடங்களையும் பூட்டியுள்ள வீடுகளையும் தற்போது டெங்கு நுளம்பு பெருகும் இடங்களாக குறிப்பிடலாம். விசேடமாக அரசாங்க உத்தியோகத்தர்களின் விடுதிகள் இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்

தொடர்ச்சியாக டெங்கை கட்டப்படுத்த புகை விசுறுதல் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இருந்து 200 மீற்றருக்கு உட்பட்ட இடங்களுக்கு புகை விசுறப்படுகிறது என்று செய்தியாளர் மகாநாட்டில் கலந்துகொண்ட மலேரியா தடுப்பு இயக்கத்தின் பதிவாளர் வைத்தியர் என். சரவணபவன் தெரிவித்தார்.

Related posts: