திருகோணமலையில் இருந்து புத்தளம் வரை தொடருந்து மூலம் நிலக்கரிகளை கொண்டு செல்லும் பணி ஆரம்பம்!

Sunday, May 8th, 2016

திருகோணமலையில் இருந்து புத்தளம் வரை தொடருந்து மூலம் நிலக்கரிகளை கொண்டு செல்லும் செயற்பாடு நேற்று ஆரம்பமானது. போக்குவரத்து அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், நாள் ஒன்றுக்கு 350 டொன் நிலக்கரி தொடரூந்து மூலம் கொண்டு செல்லப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த செயற்திட்டத்தின் மூலம் மாதாந்தம் 10 மில்லியன் ரூபா தொடரூந்து திணைக்களத்திற்கு வருமானமாக கிடைக்க பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இதுவரை நிலக்கரிகளை ஏற்றிச் சென்ற சுமார் 250 பாரவூர்திகளை சேவையில் இருந்து நீக்கவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்காலத்தில் காலியில் இருந்து கொழும்பு வரை தொடரூந்து மூலம் சீமெந்து மூடைகளை கொண்டு செல்லவும், திருகோணமலையிலிருந்து கொழும்பிற்கு கோதுமை மாவை கொண்டு செல்லவும் தொடரூந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Related posts: