திரிபோஷ சத்துணவுக்கு தட்டுப்பாடு இல்லை-சுகாதார அமைச்சு!

Tuesday, September 13th, 2016

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவான திரிபோஷ நாட்டில் தட்டுபாடு இன்றி வழங்கும் அளவுக்கு கையிருப்பு இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

சுமார் 700 மில்லியன் ரூபா செலவில் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வரும் நிலையில் பழைய இயந்திரங்களை கொண்டு தொடர்ந்து திரிபோஷ உற்பத்தி நடைபெறுவதாக அமைச்சு தெரிவிக்கின்றது.

நவீன இயந்திரங்களுடான புதிய தொழிற்சாலை எதிர்வரும் ஒக்ேடாபர் மாதம் திறக்கப்படவுள்ளது.நிலமட்டத்திலிருந்து சுமார் ஆறுபது அடி உயரத்தில் இத்தொழிற்சாலை அமையபெறவுள்ளது. சுமார் 100 வீதம் திரிபோஷ தேவையை பூர்த்திசெய்ய முடியுமென்று அமைச்சு தெரிவிப்பதுடன் சுமார் 750 மெற்றிக் தொன் மேலதிக உற்பத்தியும் கிடைக்குமென்றும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

அத்துடன் மேலதிக உற்பத்தியை சந்தையில் விற்பனை செய்வது தொடர்பாகவும் அமைச்சு ஆராய்ந்துவருகின்றது.உற்பத்தி செய்யப்படும் திரிபோஷவை களஞ்சியப்படுத்துவதற்காக 200 மில்லியன் ரூபா செலவில் இரண்டு களஞ்சிய சாலைகள் அமைக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

fdcf76798e96ed3f7279e17b40317102_xl_12092016_kaa_cmy

Related posts: