தாமதமான விமான விவகாரத்தால் பயணிகளுக்கு ரூ. 26 மில். நட்டஈடு!

ஜேர்மனியின் ப்ராங்போர்ட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்கா நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான விமானம், குறிப்பிட்ட நேரத்தை விட 15 மணித்தியாலங்கள் தாமதித்துப் பயணித்ததால், அவ்விமானத்தில் பயணித்த 259 பயணிகளுக்கு, 260 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை நட்டஈடாக வழங்க வேண்டிய சூழ்நிலை, குறித்த விமானசேவை நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விமானத்தின் விமானி, போதையில் இருந்தமையாலேயே, அவ்விமானம் தாமதமாகியுள்ளது. இந்நிலையில், குறித்த விமானியின் சேவையை, உடனடியாக இடைநிறுத்தவேண்டிய தேவை, விமானச் சேவை நிறுவனத்துக்கு ஏற்பட்டதுடன் அவருக்கான அனுமதிப் பத்திரமும் இரத்துச் செய்யப்பட்டது.
Related posts:
கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக...
'கொவிட் தொற்று இலங்கையின் பொருளாதாரத்தின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது - உலக வங்கி தெரிவிப...
மன்னார் காற்றலை மின்னுற்பத்தி விவகாரம் - குற்றச்சாட்டை நிராகரித்தார் ஜனாதிபதி - தாம் கூறிய கருத்தில்...
|
|