தாதியர் பயிற்சிநெறிக்கான பதிவு நடவடிக்கைகள் ஆரம்பம்!
 Tuesday, October 18th, 2016
        
                    Tuesday, October 18th, 2016
            
யாழ். மாவட்ட செயலகத்தின் பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையமானது தொழிலுக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டின் தொடர்ச்சியாக அரச அங்கீகாரம் பெற்ற கம்பகாவில் இயங்கும் தனியார் தாதியர் பயிற்சி நிறுவனம் ஒன்றின் ஊடாக தொழில் வாய்ப்புடனான ஒரு வருட பயிற்சி நெறிக்கு ஆட்களை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
க.பொ.த உயர்தரம் மற்றும் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி கற்றவர்கள் இவ்வரிய வாய்ப்பினை தவறவிடாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன் மேலதிக விவரங்கள் மற்றும் அறிவுறுத்தல்களை 021 221 9359 இலக்க மாவட்ட பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்தில் ஒக்டோபர் 20ஆம் திகதிக்கு முன்னதாக நேரடியாக பதிவு செய்யலாம் என்பதையும் NVQ சான்றிதழுடன் இப் பயிற்சியின் ஊடாக உள்நாட்டு, வெளிநாட்டு வைத்திய சாலைகளில் சேவையில் இணைந்து கொள்ளக்கூடிய வாய்ப்பினையும் பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் அறியத் தருகிறோம் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        