தற்கொலை தாக்குதலுக்காக சஹ்ரானினால் பயிற்றப்பட்ட 15 பெண்கள் !
Sunday, February 21st, 2021
உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலின் பிரதான தற்கொலைதாரியான சஹ்ரான் ஹசீமினால் தற்கொலை தாக்குதலுக்காக 15 பெண்கள் பயிற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாவனெல்லை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த 15 பெண்களில் 5 பேர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சாய்ந்மருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஏனையவர்கள் அனைவரும் தற்போது விளக்கமறியலிலும் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பில் உள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
வடக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனா தொற்று - வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த...
மருதனார்மடம் பழக்கடை வியாபாரி மீது வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது!
எதிர்வரும் புதனன்று நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விசேட உரை!
|
|
|
யாழில் மூன்று வர்த்தகர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா அபராதம் - யாழ். நீதவான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்...
தேர்தல் பிரசார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுங்கள் - பொது மக்களிடம் பொலிஸ் அத்தியட்சகர் நிஹ...
பாடசாலை மாணவர்களிடையே புகையிலை பாவனை அதிகரிப்பு - தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை எச...


