தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட இறுதி வரைபு இந்திய அரசிடம் கையளிப்பு

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட இறுதி வரைபு வெளியிடப்பட்டு நேற்று புதன்கிழமை (27) இந்திய அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான வைத்திய நிபுணர் பூ. லக்ஸ்மன் தலைமையிலான பேரவையின் செயற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசியல் உபகுழு உறுப்பினர்கள் அடங்கிய ஐவர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் 2.30 மணியளவில் யாழ். இந்தியத் தூதுவராலயத்தில் வைத்துத் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட இறுதி வரைபினை துணைத் தூதுவர் அ . நடராஜனிடம் நேரடியாகக் கையளித்தனர்.
அதனைத் தொடர்ந்து பேரவை உறுப்பினர்களுக்கும் , யாழ். இந்தியத் துணைத் தூதுவருக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடாநாட்டில் ஏற்படும் வீதி விபத்துக்களில் அதிகளவு இளைஞர்கள் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ரோந்துகள் அதிகரிக்கப்படும் - சிவில் பாதுகாப்புக் கூட்டத்தில் பொலிஸ் அதிகாரி த...
அழுத்தத்தை குறைக்கும் வகையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த வருடம் முதல் எளிமைப்படுத்தப்ப...
|
|