தமிழ் மக்கள் பேரவையின்  உபகுழுக்கள் அங்குரார்ப்பணம்!

Monday, June 6th, 2016

தமிழ் மக்கள் பேரவையின் கலை, கலாசாரத்திற்கான உபகுழுவும், சமூக, பொருளாதார வலுவூட்டலிற்கான உபகுழுவும், பொறுப்புக் கூறலுக்கான சர்வதேச விசாரணைக்கான உபகுழுவும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளன. குறித்த குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு  நேற்று ஞாயிற்றுக்கிழமை(05-06-2016) நண்பகல்-12 மணி முதல் யாழ்ப்பாணம் றக்கா வீதியில் உள்ள  திருமறைக் கலாமன்ற கலா முற்ற மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழ் மக்கள் பேரவையின் கலை, கலாசாரத்திற்கான உபகுழு, சமூக, பொருளாதார வலுவூட்டலிற்கான உபகுழு, பொறுப்புக் கூறலுக்கான சர்வதேச விசாரணைக்கான உபகுழு ஆகியவற்றின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் என்பன  தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு இதன் போது விளக்கமளிக்கப்பட்டன.

இந்த ஊடக சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவையின் கலை கலாசாரத்திற்கான உப குழு இணைப்பாளர்களான யாழ். சின்மயா மிஷன் தலைவர் ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள், திருமறைக் கலாமன்ற ஸ்தாபகர் அருட்தந்தை மரிய சேவியர் அடிகளார், ரி. வசந்தராஜா, தமிழ் மக்கள் பேரவையின்  சமூக, பொருளாதார வலுவூட்டலிற்கான உபகுழுவின் இணைப்பாளர்களான  யாழ். பல்கலைக் கழகப் பேராசிரியர் சிவநாதன், வைத்திய நிபுணர் கருணாகரன் தமிழ் மக்கள் பேரவையின்  பொறுப்புக் கூறலுக்கான சர்வதேச விசாரணை ஆணைக் குழுவின் இணைப்பாளர் அலன், சட்டத்தரணி என். காண்டீபன், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்களான பேராசிரியர் க. சிற்றம்பலம், நா. விஜயசுந்தரம் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கொண்டனர்.

Related posts: