தமிழினியின் கணவருக்கு உயிராபத்து?
Saturday, June 4th, 2016
புலிகளின் மகளிர் அணி முன்னாள் பொறுப்பாளரான தமிழினியின் கணவர் ஜெயகுமார் மஹாதேவன், தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரின் போது நிகழ்ந்தமை தொடர்பில் தமிழினியின் நூல்கள் வெளியிடப்பட்டமையை அடுத்தே இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒருப்பிரிவினரே இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.தமிழினியின் நூல்களை சிங்கள மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள நிலையில்அவற்றை ஆங்கில மொழியிலும் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று ஜெயகுமார் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அரச உடைமைகளை ஒப்படைக்குமாறு அறிவிப்பு - பொது நிர்வாக அமைச்சு!
இரண்டு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 11 பேர் படுகாயம்!
பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் அவதானம் - சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக...
|
|
|


