தமிழகத்திலிருக்கும் 70வீதமான இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்ப விருப்பம்!

Wednesday, October 12th, 2016

இந்தியாவில் வாழ்ந்து வரும் 70 வீதமான இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்ப விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 3 தசாப்த காலமாக இலங்கை அகதிகள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு வாழ்ந்து வரும் 100,000 போரில் சுமார் 70.000பேர் நாடு திரும்ப விரும்புவதாக ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் ஸ்தாபகர் சந்திரகாசன் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் 65.000இலங்கை அகதிகளிடம் நடத்தப்பட்ட விரிவான ஆய்வின் பின்னர் இந்த தகவல் வெளியிடப்பட்டதாகவும் ஏனைய 35.000போ தனியாக அல்லது உறவினர்களுடன் தமிழகத்தில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்து 7 ஆண்டுகள் கடந்துள்ளதாகவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இயல்பு நிலையைக் கொண்டுவர ஜனாதிபதியும் பிரதமரும் உண்மையாக முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் புலம்பெயர் மக்களை நாடு திரும்புமாறு கோரியுள்ள நிலையில், இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கை திரும்ப விரும்பும் வறிய அகதிகளுக்கு இரு நாடுகளினதும் அரசாங்கங்கள் நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்கி அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த வேண்டுமென கோரியுள்ளனர்.

1881842420Refugee

Related posts: