தனியாகச் சென்ற பெண்ணை தாக்கி  தாலிக்கொடி கொள்ளை!

Tuesday, October 18th, 2016

கோப்பாய்ப் பகுதியில் தனியாகச் சென்ற பெண்ணை, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தாக்கி, நீண்ட போராட்டத்தின் பின்னர் பெண்ணின் தாலிக்கொடியை அபகரித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் –

கோப்பாய் வைத்தியசாலையின் பின் வீதியில் பெண் ஒருவர் தனியாக ஆலயத்துக்குச் சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பெண்ணைத்தாக்கி, தாலிக்கொடியை அபகரித்து தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களிடம் இருந்து தாலிக்கொடியை பறித்துக் கொண்ட பெண் அவலக்குரல் எழுப்பினார். அச்சமடைந்த திருடர்கள் தப்பியோடினர். சிறிது தூரம் சென்ற திருடர்கள் பெண்ணின் அவலக்குரல் கேட்டு எவரும் வராததை அவதானித்துள்ளனர். மீண்டும் பெண்ணிடம் திரும்பி வந்து பெண்ணைத் தாக்கி தாலிக்கொடியை அபகரித்துச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பெண் கோப்பாய் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

TamilDailyNews_2492748498917

Related posts: