தட்டாதெரு சிறுவன் மீது தாக்குதல்: இருவர் கைது

தட்டாதெருச் சந்தி ஐயனார் கோவிலடியிலுள்ள மரக்காலையில் 17 வயது சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில், இரண்டு சந்தேக நபர்களை நேற்று (14) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது –
கடந்த வருடம் உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களே இந்தத் தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாகவும் மேலும் தாக்குதல் மேற்கொண்ட கும்பல் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் இலக்கம், போக்குவரத்து திணைக்களத்துக்கு அனுப்பி அதிலிருந்து கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் ஏனையோரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது..
தட்டாதெருச் சந்தி, ஐயனார் கோவிலடியில் அமைந்துள்ள மரக்காலைக்குள் பொல்லுகள், கைக்கிளிப்புக்களுடன் சென்ற 15 பேர் கொண்ட கும்பலொன்று அதேயிடத்தைச் சேர்ந்த கே.கேமராஜன் (வயது 17) என்ற சிறுவனைக் கடுமையாகத் தாக்கியது.
இதில் படுகாயமடைந்த சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|