தடுத்து வைக்கப்பட்ட கப்பல் சிங்கப்பூர் கொடியின் கீழ் பதிவு!

காலி கடற்பரப்பில் சந்தேகப்படும் வகையில் போக்குவரத்தில் ஈடுப்பட்டமையால் தடுத்து வைக்கப்பட்ட கப்பல் சிங்கப்பூர் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டடுள்ளதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 29 ஆம் திகதி காலி கடற் பரப்பில் தடுத்து வைக்கப்பட்ட அந்த கப்பல் இறுதியாக பாகிஸ்தான் துறைமுகத்தில் இருந்து வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலில் இருந்த 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
6 கிலோ கிராம் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!
சாவகச்சேரி வைத்தியசாலையில் பொலிஸ் காவலரண் அமைக்குமாறு நீதிவான் ஆலோசனை!
பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதில் எதிர்க்கட்சி அர்ப்பணிப்பை காட்டவில்லை - எதிர்க்கட்சி நாடாளுமன்ற உற...
|
|